ங்கிலாந்தில் கடந்த மாதம் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸால் இதுவரை 15,464 பேர் உயிரிழந்துள்ளனர்

இங்கிலாந்தில் கடந்த மாதம் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸால் இதுவரை 15,464 பேர் உயிரிழந்துள்ளனர். 114,217 பேருக்கு கொரோனா தொற்று உள்ளது. இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்கு பின் உயிர் பிழைத்தார். இந்நிலையில் இங்கிலாந்து பத்திரிகை ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளாதவது; கொரோனா வைரஸ் சீனாவில் பல ஆயிரம் பேரை பலி கொண்டு, உலகம் முழுக்க பரவத் தொடங்கிய காலத்தில், அது தொடர்பாக ஜனவரி 24-ல் கூட்டப்பட்ட அவசர அமைச்சரவை கூட்டத்தையும், அதைத் தொடர்ந்து நடந்த 4 கூட்டங்களையும் போரிஸ் புறக்கணித்தார்.


முதல் கூட்டத்தை புறக்கணித்த அன்று, சீன தூதரகம் ஏற்பாடு செய்திருந்த அந்நாட்டின் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பங்கேற்றார். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டார்.