பெர்லின்: கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதில், ஜெர்மனி மற்ற நாடுகளுக்கு முன் உதாரணமாக விளங்கி வருகின்றது.
ஐரோப்பிய நாடான இத்தாலியைச் சேர்ந்த மக்கள், கொரோனாவின் கோர பிடியில் சிக்கி தவிக்கின்றனர். நேற்று முன்தினம்(மார்ச் 21) மட்டும், 800 பேர், நேற்று(மார்ச் 22) 651 பேர் கொரோனா தாக்குதலுக்கு பலியாகி உள்ளனர்.
ஐரோப்பிய நாடான ஜெர்மனி, இத்தாலியை விட அதிக மக்கள் தொகை உடைய நாடு. ஆனாலும், கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதில், ஜெர்மனி டாக்டர்களும், சுகாதார ஊழியர்களும், மற்ற நாடுகளுக்கு முன் உதாரணமாக விளங்கி வருகின்றனர்.
'கொரோனா' பாதிப்பு; முன் உதாரணமாகும் ஜெர்மனி